சேலம் சீலநாயக்கன்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு

சேலம் சீலநாயக்கன்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருடப்பட்டது.

Update: 2023-05-18 20:36 GMT

அன்னதானப்பட்டி:

காடையாம்பட்டி அடுத்த மரக்கோட்டை ஒண்டிவீரனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய தந்தை ஜெயராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் தனது தந்தையை பார்க்க, சிவக்குமார் நேற்று முன்தினம் காரில் வந்துள்ளார். அவர் தனது காரை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்ப வந்து பார்த்த போது, காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் காருக்குள் பார்த்த போது, அதில் பையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கண்ணாடியை உடைத்து திருடிச் சென்று இருந்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்