சேலம், கிருஷ்ணகிரி, ஈரோட்டில் 12-ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம்-குறைகளை அனுப்ப இன்று கடைசிநாள்
சேலம், கிருஷ்ணகிரி, ஈரோட்டில் 12-ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில் குறைகளை அனுப்ப இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் முகாம்
இதுகுறித்து சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையிலும், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி மேற்கு இணைப்பு சாலை முகவரியில் உள்ள அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷூ, ஈரோடு கருங்கல்பாளையம் அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-2 வீரேஸ் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
இன்று கடைசிநாள்
அதாவது, சந்தாதாரர்களுக்கு 12-ந் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரையும், தொழில் அதிபர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
மேற்கண்ட கூட்டத்தில் வருங்கால வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எண், யு.ஏ.என். எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் இந்த அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும். அல்லது ஈரோடு மாவட்ட அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியில் ro.salem@epfindia.gov.in, ro.krishnagiri@epfindia.gov.in, do.erode@epfindia.gov.in -ல் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.