சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 53 கிராம் தங்கம், ரூ.12½ லட்சம் உண்டியல் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 53 கிராம் தங்கம், ரூ.12½ லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Update: 2022-08-24 21:33 GMT

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆடித்திருவிழா நடந்தது. இதில், சேலம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தினர்.

இந்தநிலையில், ஆடித்திருவிழா முடிவடைந்ததையொட்டி கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதாவது கோவிலில் நிரந்தரமாக உள்ள 5 உண்டியல்களும், திருவிழா காலத்தில் வைக்கப்பட்ட 7 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. இந்த பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் ஈடுபட்டனர். சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா தலைமையில் கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, ஆய்வர் உமா ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ.12 லட்சத்து 68 ஆயிரத்து 510 ரொக்கம் மற்றும் 53 கிராம் தங்கம், 250 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்