சேலம்: புதுப்பேட்டை குடியிருப்பு பகுதியில் தீவிபத்து - 5 வீடுகளில் அடுத்தடுத்து தீ பரவியதால் பரபரப்பு

சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் இருந்த 5 வீடுகளுக்கு பரவியுள்ளது.

Update: 2023-01-01 11:17 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில், இன்று மதியம் ஒரு வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகியுள்ளது. இதைக் கண்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் இருந்த 5 வீடுகளுக்கு பரவியுள்ளது.

அங்குள்ளவர்களால் தீயை அணைக்க முடியாத நிலையில், அந்த வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள், பத்திரங்கள் உள்பட அனைத்தும் சேதமடைந்தன. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ, அல்லது காயங்களோ ஏற்படவில்லை. இருப்பினும் தீயில் வீடுகள் சேதமடைந்ததால், அங்குள்ள குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கி அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்