சேலம்: தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் இருந்த ஏடிஎம் எந்திரங்கள் எரிந்து சேதம்
தலைவாசல் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏடிஎம் எந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சேலம்,
சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் ஆகும். இந்தப் பகுதியில் விவசாயிகள் நலனுக்காக இரண்டு ஏடிஎம் எந்திரங்கள் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த ஏடிஎம் எந்திரங்களில் திடீர் என ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எறிய துவங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அருகில் இருந்த இளைஞர்கள் தண்ணீரை எடுத்து வந்து ஏடிஎம் எந்திரத்தின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஏடிஎம் எந்திரத்திரங்களின் உள்ளே இருந்த ரொக்கப் பணம் எவ்வளவு தீயில் எரிந்து எவ்வளவு சேதம் ஆனது அல்லது பணம் ஏதும் சேதம் இல்லையா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பார்த்த பிறகு தெரியவரும் என கூறப்படுகிறது. பஸ் நிலைய பகுதியில் ஏடிஎம் இயந்திரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.