சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை; அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதில்

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-02-09 17:17 GMT

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., 'சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு விட்டதா?' என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:- 277.3 கி.மீ. தூர சென்னை-சேலம் 8 வழி பசுமைத்தட சாலைப்பணிக்கு 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தற்போது அது விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வன சட்டங்களின் கீழ் உரிய அனுமதிகளை பெற்றபிறகு அதற்கான நிலங்களை கையகப்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்