மளிகை கடையில் பெட்ரோல் விற்பனை:வியாபாரி மீது வழக்கு

கடமலைக்குண்டுவில் மளிகை கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-10 18:45 GMT

கடமலைக்குண்டு போலீசார் நேற்று மூலக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலக்கடை கிராமத்தில் பன்னீர்செல்வம் (வயது 35) என்பவர் மளிகை கடையில் பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 5 லிட்டர் பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்