சுதந்திர தினத்தன்று வீடுகள் கடைகளில் ஏற்றுவதற்காக தேசியக்கொடிகள் தபால் அலுவலகங்கள் மூலம் விற்பனை

சுதந்திர தினத்தன்று வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்றுவதற்காக தபால் அலுவலகங்கள் மூலம் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-08-09 13:22 GMT

சிவகங்கை,

சுதந்திர தினத்தன்று வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்றுவதற்காக தபால் அலுவலகங்கள் மூலம் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது என்று அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அஹமது விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவின் 76 ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு வீடுகள் அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்கள் வணிக வளாகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதை ஒட்டி சிவகங்கை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

தேசியக்கொடி ஒன்று 25 விற்பனை செய்யப்படுகிறது பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்ற இதனை பெற்றுக் கொள்ளலாம் மேலும் ஆன்லைன் மூலமாக கொடிகள் வாங்க விரும்புபவர்கள்http://www.epostoffice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்