தபால் நிலையத்தில் தேசிய கொடிகள் விற்பனை
மயிலாடுதுறை தபால் கோட்டத்தில் 15 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தேசியக்கொடி தட்டுபாடின்றி கிடைக்க தபால் அலுவலகங்களில் ரூ.25-க்கு கொடியை விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் விற்கப்படும் தேசியக் கொடியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
15 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை
இதுகுறித்து மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ரமணி கூறுகையில், மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. மேலும், 46 துணை தபால் நிலையங்களும், 155 கிராமப்புற கிளை அஞ்சலகங்களும் உள்ளன. இந்த அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது. அதோடு ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் செய்தவர்களுக்கும் தேசியக்கொடிகள் அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 135 கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார். அப்போது தலைமை தபால் அலுவலர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி கமலக்கண்ணன் மற்றும் தபால் அலுவலர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.