மானாமதுரை பகுதியில் சர்க்கரை பாகு கலந்து தேன் விற்பனை 32 லிட்டர் போலி தேனை அழித்து எச்சரிக்கை

மானாமதுரை பகுதியில் சர்க்கரை பாகு கலந்து தேன் விற்பனை செய்யப்பட்டது. 32 லிட்டர் போலி தேனை அழித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்

Update: 2023-06-22 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை பகுதியில் சர்க்கரை பாகு கலந்து தேன் விற்பனை செய்யப்பட்டது. 32 லிட்டர் போலி தேனை அழித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

போலி தேன் விற்பனை

மானாமதுரை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் தேன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இங்கு விற்பனை செய்யப்படும் தேனை கொம்புத் தேன், மலைத் தேன், மரபொந்துதேன் என கூறி லிட்டருக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து வந்துள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் தேன் கலப்பட மிக்கது என சிலர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தனர்.

இதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் மூங்கில் ஊராணி பகுதியில் ஒருவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

கலப்பட தேன் அழிப்பு

அங்கு தயாரித்து வைத்திருந்த தேன்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சர்க்கரை பாகில் தேன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. 32 லிட்டர் தேனை கீழே ஊற்றி அழித்ததுடன் அதை தயாரித்தவர்களை உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் தேன் வாங்கும் போது காலாவதி தேதி மற்றும் தரச்சான்றிதழ் உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே வாங்க வேண்டும். சாலையோரங்களில் விற்கப்படும் தேனை பொதுமக்கள் பரிசோதித்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்