அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை

ராமநாதபுரம் மாவட்ட அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நேற்று ெதாடங்கியது.

Update: 2023-03-06 18:36 GMT

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான 4-வது கட்ட தங்க பத்திர சேமிப்பு திட்டமானது நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்க பத்திர திட்டத்தில் ஒரு கிராமின் விலை ரூ.5ஆயிரத்து 611 மட்டும் ஆகும். இத்திட்டத்தில் தற்போது ஒரு நபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதன் மூலம் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். தங்கப் பத்திர சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும். இதுதொடர்பான விவரங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். எனவே, ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் மத்திய அரசின் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்