போலீஸ் நிலையங்களில் மலிவு விலையில் பட்டாசுகள் விற்பனை

போலீஸ் நிலையங்களில் மலிவு விலையில் பட்டாசுகள் விற்பனை

Update: 2022-10-22 18:45 GMT

கூடலூர்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதிய துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசில் நிலையங்களில் காவல்துறை சார்பில் மலிவு விலையில் பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசுகள் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, துறை ரீதியாக சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த போலீசில் நிலையங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட மிகக்குறைந்த விலையில் பட்டாசுகள் விற்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.

----------

Tags:    

மேலும் செய்திகள்