உழவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை

மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.

Update: 2022-07-11 18:56 GMT

மாடப்பள்ளி உழவவ் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

கூட்டுறவு சங்கம்

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தில் மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, கந்திலி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பருத்தியை, மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொண்டுவந்து வைப்பார்கள்.

இந்த பருத்தியை ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மும்பை, பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் பார்வையிட்டு ரகசிய முறையில் விலை நிர்ணயம் செய்வார்கள். இதில் யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு பருத்தி விற்பனை செய்து பணத்தை வியாபாரிகளுக்கு வழங்குவார்கள்.

ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை

அதன்படி நேற்று பருத்தி ஏல விற்பனை தொடக்கவிழா மாடப்பள்ளி கூட்டுறவு உழவர் சேவை கடன் சங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஏ.தேவராஜ், தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்ஏ. சண்முகம் வரவேற்றார். சார் பதிவாளர் டி.ஆர்.தர்மேந்திரன் பருத்தி ஏலத்தை தொடங்கி வைத்தார். முதல் நாளில் 500 மூட்டை பருத்தியை ஏலத்தில் வைத்திருந்தனர். ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஏலத்தில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 400- க்கு ஏலம் போனது. நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விவசாயிகள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பருத்திக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். முடிவில் செயலாளர் கே.ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்