ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

பொய்கை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

Update: 2023-08-01 18:14 GMT

வேலூரை அடுத்த பொய்கையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கிலான ரூபாய்க்கு மாடுகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் கடந்த வாரத்தை விட அதிகமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கடந்த வாரம் ரூ.1 கோடிக்கும் குறைவாக வியாபாரம் நடைபெற்றது. ஆனால் நேற்று ரூ.1 கோடிக்குமேல் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்