ஒரே நாளில் ரூ.12 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை

சாத்தூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் மின்னணு தேசிய வேளாண் சந்தையின் மூலம் ரூ.11.79 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 18:45 GMT

சாத்தூர்

சாத்தூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் மின்னணு தேசிய வேளாண் சந்தையின் மூலம் ரூ.11.79 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

தேசிய வேளாண் சந்தை

விவசாயிகள் பயன்பெறும் வகையில் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மத்திய அரசின் மின்னணு தேசிய விழா சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளை பொருட்களை தேசிய அளவில் சந்தைப்படுத்தி விவசாயிகள் நியாயமான விலை பெறுவது மற்றும் வியாபாரிகள் தரமான பொருட்களை நேரில் தேர்வு செய்து கொள்முதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒழுங்குபடுத்திய சந்தை, வெளிப்படையான பரிவர்த்தனை, மின்னணு எடை, அதிக வியாபாரிகள் பங்கேற்பு, நியாயமான விலை, போன்ற வசதிகளை பெற முடியும்.

மேற்படி விலை பொருட்களை குறைந்த வாடகையில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதி, உலர் களம் மற்றும் பொருள் ஈட்டுக்கடன் வசதி ஆகிய வசதிகள் உள்ளன.

விற்பனை

சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 569 விவசாயிகள் மற்றும் 13 வியாபாரிகள் இ-நாம் திட்டத்தின் கீழ் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். கடந்த 22-ந் தேதியன்று சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் 647 மூடைகளில் 51.971 டன் அளவுள்ள மக்காச்சோளத்தை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் உள்மாவட்ட வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டனர்.

மக்காச்சோளம் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ.2320 ஆகவும் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.2800 ஆகவும் சராசரி விலையாக ரூ.2280 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

51.971 டன் மக்காச்சோளத்தை ரூ.11.79 லட்சத்திற்கு விற்பனை செய்து, 5 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தொடர்பு கொள்ளலாம்

எனவே சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து இ-நாம் வர்த்தகம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் விளை பொருட்களை விற்பனை செய்யவும் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்