பல்லடம்
பல்லடத்தில் தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி நிருபர்களிடம் கூறியதாவது:- பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவது பல்வேறு நாடுகளிலும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்கி விற்பதற்கு தடை உள்ளது. இதனால் மரம் ஏறும் தொழிலாளர்களுக்கும், தென்னை பனை விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டிய வருவாய் தடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயம் மூலமாக சமீபத்தில் பெரும் மரணங்கள் ஏற்பட்டுள்ள சூழலில் கள் இறக்கி விற்பதன் மூலமாக இந்த பிரச்சினையிலிருந்து விடுபட இயலும். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், தமிழக அரசு உடனடியாக கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.