ஆயத்த ஆடை தொழில் திறன் கவுன்சில் தலைவராக சக்திவேல் நியமனம்

Update: 2023-01-13 17:01 GMT


மத்திய அரசின் தொழிலக அமைச்சகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்கார ஜவுளித்துறை தொழில் திறன் கவுன்சில் தலைவராக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகள் இந்த பொறுப்பில் அவர் பதவி வகிப்பார். ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்துவதால் உற்பத்தி திறன் அதிகரித்து தொழில் முனைவோர்கள் மேம்பட முடியும். இந்தியாவில் தொழில் திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதை பிரதமர் நரேந்திர மோடி திட்டமாக கொண்டு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்கார ஜவுளித்துறை தொழில் திறன் கவுன்சில் தலைவராக சக்திவேல் 2-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு பதவி வகித்தார். இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவராகவும் அவர் உள்ளார். இந்த கவுன்சில் மூலமாக தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து ஆயத்த ஆடை துறையை மேம்படுத்த முடியும் என்று சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்