சாயர்புரம் போப் கல்லூரிதேசிய இளைஞர் தின விழா

சாயர்புரம் போப் கல்லூரி தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-18 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் தன்னூத்து கிராமத்தில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிமுதல்வர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் தினகரன் வரவேற்று பேசினார். இதில் மாணவர்கள் தேசிய இளைஞர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனார். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து தலைவர் சாதிகஅலி, தன்னூத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பேச்சிமுத்து, தொழில் அதிபர் சுடலை மணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசியர் ஸ்டன்லி டேவிட் பிச்சை, தினகரன் மற்றும் மாணவர்கள் செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கல்லூரி செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்