சாயர்புரம் போப் கல்லூரி மாணவர் சாதனை

தேசிய அளவிலான ஆண்களுக்கான சீனியர் குத்துச்சண்டை போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-08-19 14:13 GMT

சாயர்புரம்:

தேசிய அளவிலான ஆண்களுக்கான சீனியர் குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சாயர்புரம் போப் கல்லூரி வணிகவியல் துறை மாணவர் முருகன் 54 முதல் 57 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.

சாதனை படைத்த மாணவரை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே.செயலாளரும், கல்லூரி செயலாளருமான நிகர் பிரின்ஸ் கிப்சன், கல்லூரி முதல்வர் டாக்டர் இம்மானுவேல், உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ்ராஜன், சேகர குருவானவர் டேவிட்ராஜ், வெலிங்டன், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்