சாய்பாபாவின் 104-ம் ஆண்டு மகா சமாதி விழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
சாய்பாபாவின் 104-ம் ஆண்டு மகா சமாதி விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சேர்வைக்கார தெருவில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்தநிலையில், சாய்பாபாவின் 104-ம் ஆண்டு மகா சமாதி விழாவையொட்டி பெரிய ஏரி கீழக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சாய்பாபா கோவில் சன்னதியை அடைத்தனர். பின்னர் சாய் பாபாவுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தேன், திரவியம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.