தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை
தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நாகை,
கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுறுவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாஜ் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழக கடலோர பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
கடலோரப் பகுதிகளில் தீவிரவாத செயல்கள், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.