சாகுபுரம் கமலாவதி பள்ளிமாணவ, மாணவிகள் தேசியபோட்டிகளில் சாதனை
சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
ஆறுமுகநேரி:
ஹைதராபாத் ஐ.ஐ.டி.யில் இந்திய தொழில் நுட்பக் கழகம் சார்பில் தேசிய அளவில் தொழில் முனைவோர் சாம்பியன் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் சாகுபுரம் கமலாவதி பள்ளியில் இருந்து 7 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இங்கு தொழில் முனைவோர் சாம்பியன் மற்றும் ரோபாட்டிக்ஸ் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
தொழில் முனைவோர் சாம்பியன் போட்டியில் மாணவர்கள் வி.அனிஷ் சங்கர், எம். குஷ்வந்த், எஸ்.எம். கார்த்திக், எஸ்.சிவ சந்தோஷ் ஆகியோர் சிறந்த வடிவமைப்பாளர்க்கான விருதை பெற்றனர். மாணவி என்.எஸ். ஆனன்யா, மாணவர்கள் எச். கார்த்தி, என்.எஸ். அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றனர்.
தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த அடல் டிங்கரிங்க் ஆய்வக ஆசிரியை சேர்மசத்தியசிலி ஆகியோரை பள்ளி டிரஸ்டிகளும் ,டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளர் (நிதி) பி. ராமச்சந்தின், பள்ளி முதல்வர் எஸ்.அனுராதா. மாணவர்களின் மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், தலைமை ஆசிரியர் இ. ஸ்டீபன் பாலாசிர், தலைமை ஆசிரியை என். சுப்புரத்தினா, நிர்வாகி வி. மதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.