தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

வாகத்தொழுவு ஊராட்சியில் உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-09-11 13:42 GMT

குடிமங்கலம்

வாகத்தொழுவு ஊராட்சியில் உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பாறு ஓடை

குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. உப்பாறு. ஓடையின் வழியாக செல்லும் தண்ணீர் இறுதியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணையின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடையில் செல்லும் தண்ணீர் இப்பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

உயர் மட்ட பாலம்

உப்பாறு ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக சில இடங்களில் தரைமட்ட பாலமும் சில இடங்களில் உயர்மட்ட பாலமும் கட்டப்பட்டு உள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வாகத்தொழுவு ஊராட்சியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த விளை பொருள்களை பாலத்தின் வழியாக கொண்டு செல்கின்றனர் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பாலத்தின் பக்கபாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் கான்கிரீட்டுகள் பெயர்ந்து தற்போது பாலம் தடுப்பு சுவர் இந்தி காணப்படுகிறது.

பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இரவு நேரங்கள்மற்றும் மழை காலங்களில் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தரைப பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..


Tags:    

மேலும் செய்திகள்