எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு - அதிமுகவினர் அதிர்ச்சி

எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-21 02:31 GMT

மதுரை,

ஐகோர்ட்டின் மதுரை கிளை அருகே கே.கே.நகர் உள்ளது. இங்கு அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலையை அதிமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு திறந்து வைத்தார். பின்னர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட்டது.

அதிமுகவின் இருபெரும் தலைவர்களின் சிலைக்கு பிறந்த நாள், மறைந்தநாள் தினங்களில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளை அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் நேற்று மதியம் காவித்துண்டு அணிவித்து சென்றுள்ளனர். இதை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அதிமுகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்து சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எம்.ஜி.ஆர். சிலையில் இருந்த காவித்துண்டையும் போலீசார் அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்