ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

தொழிலாளர் உதவி ஆணையா் அலுவலகத்தில் பதிவு பெற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2022-08-27 17:31 GMT

கடலூர், 

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ஷூ, சீருடை மற்றும் முதலுதவி பெட்டி ஆகிய பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு பெற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களுக்கு தற்போது பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஓட்டுனர் உரிமம்

எனவே பதிவு பெற்ற ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் தங்களது நல வாரிய அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் நகல்களை கொண்டு வந்து பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்