சடையாண்டி கோவில் திருவிழா

சடையாண்டி கோவில் திருவிழா 3 நாட்கள் நடந்தது

Update: 2022-06-09 18:24 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் சடையாண்டி கோவிலில் வைகாசி திருவிழா 3 நாட்கள் நடந்தது. விழாவையொட்டி ராணி மங்கம்மாள் சத்திரம் முன்பு கரகம் ஜோடித்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தது. இதையடுத்து சக்தி கிடா வெட்டப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மிபாடல்பாடி கோவிலில் வைத்தனர். மேலும் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கிராம பொதுமக்கள் கிடாவெட்டி பொங்கல்வைத்து வழிபட்டனர். விழாவில் இரண்டாம் நாள் இரவு 8 மணிக்கு கோவில் முன்பு முளைப்பாரி வைத்து கும்மிபாடல் பாடி வழிபாடு செய்து பொங்கல் பிரசாதம் வழங்கினர். 3-ம் நாள் காலை 8.15 மணிக்கு கோவிலிருந்து பூசாரி கரகத்துடன் முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் பின்புறம் உள்ள ஓட்டார்குளத்தில் கரைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதன் ஏற்பாடுகளை கிராமக்கமிட்டி மற்றும் தாதம்பட்டி கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்