கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக 30 டன் யுரேனியத்துடன் மதுரையில் தரை இறங்கிய ரஷிய விமானம்
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்காக 30 டன் யுரேனியத்துடன் மதுரையில் ரஷிய விமானம் தரை இறங்கியது. பின்னர் அந்த யுரேனியம் கன்டெய்னர் லாரிகளில் கூடங்குளம் கொண்டு செல்லப்பட்டது.
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்காக 30 டன் யுரேனியத்துடன் மதுரையில் ரஷிய விமானம் தரை இறங்கியது. பின்னர் அந்த யுரேனியம் கன்டெய்னர் லாரிகளில் கூடங்குளம் கொண்டு செல்லப்பட்டது.
30 டன் யுரேனியம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு மூலப்பொருளான யுரேனியம், ரஷியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அந்த விமானம் நேற்று பகல் 12.40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
பின்னர் அந்த விமானத்தில் இருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு மாலை 4.30 மணிக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவசர தேவைக்காக மேலும் ஒரு கன்டெய்னர் லாரியும் உடன் சென்றது.
துணை ராணுவம் பாதுகாப்பு
யுரேனியம் ஏற்றப்பட்ட கன்டெய்னர் லாரிகளுக்கு பாதுகாப்பாக துணை ராணுவம் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.