கிராமப்புற விளையாட்டு போட்டிகள்
களக்காட்டில் கிராமப்புற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
களக்காடு:
களக்காட்டில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டம், நெல்லை நேரு யுவ கேந்திரா ஆகியவற்றின் சார்பில் கிராம அளவிலான கிராமப்புற விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனை களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார், கபடி, கைப்பந்து, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கோ கோ, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சூழல் திட்ட வனசரகர் மீனா, நேரு யுவகேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினர் மிதார் முகைதீன், சூழல் திட்ட வனவர்கள் அப்துல்ரஹ்மான், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.