செஞ்சியில் கிராம வறுமை குறைப்பு திட்டம் விளக்க பயிற்சி கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

செஞ்சியில் கிராம வறுமை குறைப்பு திட்டம் விளக்க பயிற்சி கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டாா்.

Update: 2022-11-16 18:45 GMT

செஞ்சி, 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கிராம வறுமை குறைப்பு திட்டம் தொடர்பான விளக்க பயிற்சி கூட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மகளிர் திட்ட அலுவலர் ரஞ்சிதம் வரவேற்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் வறுமையை ஒழிக்கின்ற பட்டியல் கணக்கிடும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முதியோர் உதவித்தொகை பெற தகுதி உடையவர்களையும், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களையும் கண்டறிந்துஅவர்களுக்கு உதவி தொகை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க தலைவர் அணையேறி ரவி, செயலாளர் அய்யனார், பொருளாளர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், பழனி, சுந்தரபாண்டியன், குமார், கண்ணன், கலா, செல்வகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்