கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-15 18:09 GMT

கரூர்,

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சிங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கமலேஷ் சந்திரா கமிட்டியினர் பரிந்துரைத்த 3 கட்ட சர்வீஸ் அடிப்படையில் வழங்க வேண்டிய வெயிட்டேஜ் சாதகமான பரிந்துரையை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்