ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-13 19:39 GMT

  16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 780-க்கும்மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறையில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

16 அம்ச கோரிக்கைகள்

இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்