ரூ.10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.86 லட்சம் கூடுதலாக மது விற்பனை நடந்து உள்ளது.

Update: 2022-10-25 18:45 GMT

திருவாரூர்;

தீபாவளி பண்டிகையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.86 லட்சம் கூடுதலாக மது விற்பனை நடந்து உள்ளது.

மது விற்பனை

திருவாரூர் மாவட்டத்தில் 108 மதுக்கடைகள் உள்ளன. சரசரியாக ஒரு நாளில் சுமார் ரூ.2 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது மதுப்பிரியர்கள் அதிக அளவிலான மது வகைகளை வாங்கி செல்வது வழக்கம். இதனால் தீபாவளி பண்டிகையின் போது மதுக்கடைகளில் விற்பனை வழக்கத்தை விட அதிகம் இருக்கும்.

ரூ.10 கோடியே 6 லட்சம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்ட மதுக்கடைகளில் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையன்று ரூ.4 கோடியே 81 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது திருவாரூா் மாவட்டத்தில் ரூ.9 கோடியே 20 லட்சத்துக்கு மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.86 லட்சத்துக்கு அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்