ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்...

சாலையில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி வைத்து எடுத்தனர்.

Update: 2023-01-23 03:23 GMT

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அருர் அருகே கொளகம்பட்டி வனப்பகுதியில், சாலை ஓரத்தில் 2 ஆயிரம், இருநூறு, நூறு, பத்து ரூபாய் தாள்கள் போன்ற வண்ண தாள்கள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த சிறுவர்களும், பெரியவர்களும், ஓடி ஓடிப்போய் அவற்றை எடுத்தனர்.

அப்போது சாலையில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி வைத்து எடுத்தனர். ஆனால், அவை அனைத்தும் சிறுவர்கள் விளையாடும் கலர் தாள்கள் தெரிய வந்ததும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்