லாரி பட்டறையில் ரூ.1½ லட்சம் வயர்கள் திருட்டு

லாரி பட்டறையில் ரூ.1½ லட்சம் வயர்கள் திருட்டு போனது.

Update: 2023-03-31 21:18 GMT

சேலம் செவ்வாய்பேட்டை பிள்ளையார்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கிச்சிப்பாளையம் சிவன்கரடு பகுதியில் லாரிகளை பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 29-ந் தேதி வேலை முடிந்தவுடன் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, பட்டறையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான வெல்டிங் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்