மினி மாரத்தான் ஓட்டம்

வேலூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-12 16:25 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) வேலூர் மண்டலம் சார்பில் மினிமாரத்தான் ஓட்டம் வேலூரை அடுத்த பெருமுகையில் நேற்று நடைபெற்றது. இதனை வேலூர் அத்லெடிக் பவுண்டேஷன் தலைவர் நிதிஷ்பாண்டியன் தொடங்கி வைத்தார். விபத்தை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுபோக்குவரத்தை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அலுவலகம் அருகே பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் அத்ெலடிக் பவுண்டேஷன் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. வேலூர் மண்டல பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. வேலூர் மாவட்ட செயலாளர் பரசுராமன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மினி மாரத்தான் ஓட்டத்தில் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசும், 5 முதல் 10-ம் இடம் பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்