உடன்குடி தேரியூரில் ஆர்.எஸ்.எஸ். பண்பு பயிற்சி முகாம்
உடன்குடி தேரியூரில் ஆர்.எஸ்.எஸ். பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வர் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 20 நாள் பண்புப் பயிற்சி முகாம் தொடங்கியது. தென் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முகாமில் கலந்துகொண்டனர். முகாமில் கராத்தே, சிலம்பம், யோகா, ஓழுக்கம், கட்டுப்பாடு, ஈந்து ஒற்றுமை, நாட்டின் பழம்பெருமைகள் ஆகியவை கற்றுத்தரப்பட்டது.முகாமின் நிறைவு விழாவிற்கு ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். முகாமின் வரவேற்புக்குழு தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்றார். ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கொம்பையா, தொழிலதிபர்கள் ஸ்ரீரீதர் வேம்பு, சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ். மாநில பொருளாளர் கணபதி சுப்பிரமணியன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.ஜனதா மாநில வர்த்தக ஆணி தலைவர் ராஜக்கண்ணன், மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட செயலர்பாண்டி உட்பட திரளான சங்கப் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்