ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
அம்பையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
அம்பை:
தமிழகத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
நெல்லை மாவட்டம் அம்பையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அம்பை கிருஷ்ணன் கோவில் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம் ஆர்ச், நீதிமன்றம், புதுக்கிராமம் தெரு, பெரியகுளம் தெரு, வடக்கு ரத வீதி, பஸ் நிலையம் வழியாக மீண்டும் கிருஷ்ணன் கோவிலில் நிறைவடைந்தது.
இதில், நெல்லை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.