கொடி நாள் நிதியாக ரூ.77.60 லட்சம் பெறப்பட்டு உள்ளது-கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு கொடி நாள் நிதியாக ரூ.77 லட்சத்து 60 ஆயிரம் பெறப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Update: 2022-12-07 18:45 GMT

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு கொடி நாள் நிதியாக ரூ.77 லட்சத்து 60 ஆயிரம் பெறப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

கொடிநாள்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடிநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கொடிநாள் நிதியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் 8 முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் அவர் பேசியதாவது;-

நாட்டின் முப்படைகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந்தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள் பொதுமக்களிடம் வசூல் செய்யும் நிதி, போரில் உயிர் இழந்த, ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.77.60 லட்சம் நன்கொடை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.77 லட்சத்து 60 ஆயிரம் கொடிநாள் நன்கொடை பெறப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆண்டில் மட்டும் ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், முன்னாள் படைவீரர்கள் நலன் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்