குரும்பப்பட்டி வனப்பகுதியில் செம்மண் வெட்டி கடத்திய முதியவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
குரும்பப்பட்டி வனப்பகுதியில் செம்மண் வெட்டி கடத்திய முதியவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் அடிவாரம் பகுதியில் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இதற்கு பின்புறமாக உள்ள காப்புக்காட்டில் செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் சின்னதம்பி விசாரணை நடத்தினார்.
அதில், கோரிமேடு பகுதியில் நர்சரி கார்டன் வைத்துள்ள ராமகிருஷ்ணன் (வயது 67) என்பவர், குரும்பப்பட்டி காப்புக்காட்டில் இருந்து அடிக்கடி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வனத்துறை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இதுபோன்று சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.