மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-02-13 17:32 GMT

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி. வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 357 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு செயற்கைக் கால், 2 பேருக்கு வங்கிக் கடன் மானியம், ஒருவருக்கு ஊன்றுகோல், ஒருவருக்கு முழங்கை தாங்கி என ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், துணை கலெக்டர்கள் முரளி, மணிமேகலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்