கல் வீச்சில் காயமடைந்த போலீசாருக்கு மருத்துவ உதவிக்காக ரூ.25 ஆயிரம்

கல் வீச்சில் காயமடைந்த போலீசாருக்கு மருத்துவ உதவிக்காக ரூ.25 ஆயிரத்தை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

Update: 2023-01-21 18:19 GMT

திருப்பத்தூர்

கல் வீச்சில் காயமடைந்த போலீசாருக்கு மருத்துவ உதவிக்காக ரூ.25 ஆயிரத்தை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

நாட்றம்பள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் முஷ்ரப் (வயசு 19) என்ற வாலிபர் இறந்தார். அங்கு பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.. இந்த சம்பவத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் திருமால் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கினார். அவருடன் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகணேஷ், ஆயுதப்படை தணை சூப்பிரண்டு விநாயகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்.ரஜினி குமார், கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்