மகாதீப மலை உச்சியில் ரூ.20 தண்ணீர் பாட்டில் ரூ.250-க்கு விற்பனை

மகாதீப மலை உச்சியில் ரூ.20 தண்ணீர் பாட்டில் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2022-12-06 14:00 GMT

மகாதீப மலை உச்சியில் ரூ.20 தண்ணீர் பாட்டில் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை பக்தர்கள் பலர் அருகில் சென்று பார்ப்பதை பெரும்பாக்கியமாக கருதுவார்கள். ஏராளமான பக்தர்கள் கரடு முரடான 2,668 அடி உயர மலை உச்சி மீது சிரமங்களை பொருட்படுத்தாது ஏறிச்சென்று மகாதீபத்தை தரிசனம் செய்வார்கள்.

மலை உச்சிக்கு ஏறும்போது ஆக்சிஜனை சமன் செய்ய தண்ணீர் தேவை. தண்ணீர் குடித்தால்தான் களைப்பு நீங்கி புத்துணர்வு ஏற்படும். இதனால் பலர் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச்செல்வார்கள். மலை ஏறுவதே சிரமமாக இருக்கும்போது ஓரிரு தண்ணீர் பாட்டில்களைத் தான் கொண்டு செல்ல முடியும்.

ஆனால் மலை உச்சிக்கு சென்ற பின்னர் அந்த பாட்டில் தண்ணீர் காலியாகி விடும். எனவே அவர்களுக்கு அங்கு குடிநீர் என்பது அவசியமாகிறது. எனவே இதைபயன்படுத்தி சிலர் மலை உச்சியில் ரூ.20 மதிப்புடைய தண்ணீர் பாட்டிலை நேற்று ரூ.250-க்கு விற்பனை செய்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி தாகத்தை தணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்