பஸ்சில் கடத்திய ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்2 பேர் கைது

பஸ்சில் கடத்திய ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-07 18:27 GMT

திருவண்ணாமலை

பஸ்சில் கடத்திய ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை வழியாக பஸ்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் நகரின் எல்லை பகுதியில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக பெங்களூருவில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பஸ்சை சோதனை செய்தனர் அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த திருவண்ணாமலை அய்யம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முத்து (வயது 37), திருவண்ணாமலை நகரம் ராமலிங்கனார் நகரை சேர்ந்த வடமலை (47) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 143 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்