ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

Update: 2022-10-06 19:19 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், ரவி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான 300 கிலோ போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கடையம் மாலிக் நகரைச் சேர்ந்த முகமது கனி மகன் அஜ்மீர் அலி (வயது 36), அதே பகுதியை சேர்ந்த மைதீன் மகன் காவித் (32), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த சையது மசூது மகன் முகமது தவ்பீக் (20) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து போதைப்பொருட்களை கொண்டு வந்து அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போதைப்பொருட்கள், ஒரு கார், ேமாட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்