துறையூரில் ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

துறையூரில் ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-05-02 14:30 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் அருகே உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தெப்பக்குளம் அருகே பாலாஜி என்பவரது கடையில் 20 பாக்கெட் குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் கடைக்கு அருகே இருந்த ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு இருந்து 826 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும். இதனையடுத்து பாலாஜியை பிடித்து துறையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்