அடகு கடை உரிமையாளரை வழிமறித்து ரூ.7½ லட்சம் பறிப்பு

திருவள்ளூர் அருகே அடகு கடை உரிமையாளரை வழிமறித்து ரூ. 7½ லட்சம் பறிக்கப்பட்டது.

Update: 2022-06-17 08:11 GMT

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் அம்பேத்கார் சிலை அருகே வசித்து வருகிறார். திருவள்ளூரை சேர்ந்த உறவினர் ஒருவருடன் சேர்ந்து மணவாளநகரில் அடகு கடை நடத்தி வருகிறார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு ரூ. 7½ லட்சத்தை ஒரு பையிலும், ரூ.2 லட்சத்தை தனது பேண்ட் பாக்கெட்டிலும் வைத்துக் கொண்டு 9 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை மேல்நல்லாத்தூர் அம்பேத்கர் சிலை அருகே உள்ள வேகத்தடை அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளை மெதுவாக இயக்கிய போது பின்னால் 2 இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பிரகாஷ் வைத்திருந்த ரூ.7½ லட்சத்துடன் கூடிய பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனால் நிலை குலைந்த பிரகாஷ் செய்வதறியாது தவித்தார். இது குறித்து அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். நாள்தோறும் கடையை மூடிவிட்டு பணத்தை எடுத்து செல்வதை அறிந்த மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்த னர்.

Tags:    

மேலும் செய்திகள்