சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் ரூ.6.86 லட்சம் அபராதம் வசூல்

சேலம் மாநகரில் ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.6.86 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-06 18:45 GMT

கோப்புக்கட்சி 

வாகன ஓட்டிகள்

சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், மதுபோதையில் செல்பவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக 5 ரோடு பகுதியில் ஹெல்மெட் அணியாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் நபர்களின் செல்போன் எண்களுக்கு ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலில் இருந்து வருகிறது.

அந்த வகையில், சேலம் மாநகரில் ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டவர்கள், அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்து வந்தனர். இவர்களிடம் அபராத தொகையை வசூலிக்க மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நடவடிக்கை எடுத்து மோட்டார் வாகன வழக்கு ஆன்லைன் பேமண்ட் கண்காணிப்பு சென்டர் என்ற பிரிவை தொடங்கி வைத்தார்.

ரூ.6.89 லட்சம் வசூல்

இதில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அபராதம் விதிக்கப்பட்டவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அபராத தொகையை செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் இந்த பிரிவு தொடங்கப்பட்டது. அந்த மாதம் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலாகி உள்ளது. அதாவது மொத்தம் 1,107 பேர் அபராத தொகையை செலுத்தி உள்ளனர்.

போக்குவரத்து அபராத தொகையை செலுத்துவதில் பல்வேறு இடையூறு இருந்து வந்தது. இதற்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக போக்குவரத்து பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்