வங்கி மேலாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு

திருப்பத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2023-07-12 18:55 GMT

திருப்பத்தூர் டவுன் கருத்தப்பர் தெரு பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 48). இவர் திருப்பத்தூர் வெங்களாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கிளை மேலாளராக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று காலை கணேசன் பணிக்கு சென்று விட்டார்.

வீட்டில் மனைவி அகிலா ஞானம் துணிகளை துவைத்து மொட்டை மாடியில் காய வைக்க சென்றார். பின்னர் கீழே வந்து பொருட்களை எடுக்க பீரோவை திறந்தபோது அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இவற்றை யாரோ திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து கணேசன் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்