ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-08 19:34 GMT

நெல்லை மாவட்டம் மேலக்கருங்குளத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் பாலமுருகன். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பாபு ஜேக்கப் என்பவருக்கு தொழில் செய்வதற்காக ரூ.10 கோடி கடன் பெற்று தருவதாக கூறி பதிவு கட்டணமாக ரூ.10 லட்சம் மற்றும் 4 வங்கி காசோலைகளை பெற்றுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடன் வாங்கி தராமல் காலதாமதம் செய்தார்.

இதற்கிடையே அந்த காசோலைகளில் 2 காசோலைகளை வங்கியில் செலுத்தி ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு பாலமுருகன் தன்னை ஏமாற்றியதாக பாபு ஜேக்கப் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் மீது புகார் செய்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த பாலமுருகனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்