பழைய கார்களை புதுப்பித்து தருவதாக ரூ.50 லட்சம் மோசடி
கோவையில் பழைய கார்களை புதுப்பித்து தருவதாக ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாய்பாபாகாலனி
கோவையில் பழைய கார்களை புதுப்பித்து தருவதாக ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பழைய கார்கள்
திருச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ் துரை(வயது 56). இவர் பழைய கார்களை வாங்கி, உரிய முறையில் பழுது பார்த்து, புதுப்பித்து, விற்பனை செய்யும் ெதாழில் செய்து வருகிறார். மேலும் கார்களை பழுது நீக்க வெளிநபர்களிடம் வழங்குவது வழக்கம்.
அதன்படி வெங்கடேஷ் துரை 7 கார்களை புதுப்பிக்க கோவை சாய்பாபாகாலனி ரமணா லே அவுட் பாரதியார் சாலையை சேர்ந்த சேர்ந்த சத்ய கீதன், கணேஷ் முத்தையா ஆகியோரிடம் கொடுத்து இருந்தார்.
ரூ.50 லட்சம் மோசடி
அவர்கள் பழைய கார்களுக்கு பொருத்த உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். அந்த பணத்தை வெங்கடேஷ் துரை கொடுத்தார். ஆனால் உதிரிபாகங்கள் வாங்காமலும், கார்களை புதுப்பித்து தராமலும் சத்யகீதன், கணேஷ் முத்தையா ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாய்பாபாகாலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரெஜினா மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.